JK and Cinema

தலைப்பு: ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

எழுதியவர்: ஜெயகாந்தன்

பதிப்பு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

விலை: 170/-

பக்கங்கள்: 360

jk

பி.யூ. சின்னப்பாவின் ரசிகரான ஜே.கே, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்ட காலத்தில் ஓர் நாடக குழுவில் சேர்ந்ததில் இருந்து அனுபவம் தொடர்கிறது. புத்தகத்தில் ஜெயகாந்தனின் சினிமா அனுபவங்கள் எல்லாம் விவரமாக எழுதப்பட்டுள்ளன. அவருக்கும் சினிமா உலகுக்கும் உள்ள உறவை, அவரை விடவும் சிறப்பாகவும் விளக்கமாகவும் நான் எழுதிவிட முடியாது.  எனவே, இந்த சுயசரிதையில் இருந்து நான் கற்றுக் கொண்ட 5 விஷயங்களை சொல்கிறேன் .

தன்னைப் பற்றிய தெளிவு: என்.ஸ்.கே.உடன் பரிச்சயம், டைரக்டர்கள் விஜயன், பீம்சிங் மற்றும் நடிகர்கள் சந்திரபாபு, நாகேஷ், ஸ்ரீகாந்த்  உடன் நெருக்கம் இருந்த போதும் திரையுலகம் எனக்கில்லை என்பதில் உள்ள தெளிவு.

சமரசமின்மை: தன்னுடைய படைப்புகளுக்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பு இருக்கும் போதும்,  கதை அல்லது காட்சி அமைப்பில் சில சமரசங்கள் செய்தால்,    அங்கும் கோலோச்ச முடியும் எண்ணும்போதும் தன் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது.

தான் நம்பியதை நோக்கிய முயற்சி: சினிமா என்பது ஒரு கலை வடிவம். கலை என்பது சமூகத்தின் மாற்றத்திற்கு வாய்க்காலாக இருக்க வேண்டும். இன்றைய சினிமா மலிவான உணர்ச்சியை  தூண்டுகிறதே அன்றி சிந்திக்கவோ அல்லது சமூகத்தின் எதார்தத்தையோ சொல்லுவது இல்லை என்று ஒரு விமர்சகன் போல் கருத்து சொல்லாமல்,  தன் அளவிற்கு முயற்சி செய்து உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தையும் டைரக்ட் செய்தது. டைரெக்ஷனில் முன்னனுபவம் இல்லாமல்.

கற்றுக் கொண்டே இருப்பது: டைரெக்ஷன் புதிது என்ற போதும் அதற்கு தேவையான நபர்களை சேர்த்துக் கொள்வதும், அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும், வீணை வாசிக்க கற்றுக்கொண்டதும் நேரமில்லை என்று சொல்லும் நம்மை போன்றவர்களுக்கான பாடம்.

உண்மையை பேசுதல், எப்பொழுதும்!: சுயசரிதை எழுதும் பொது அது ஒரு சுய புராணமாக இருக்க வேண்டுமா அல்லது சுய பரிசோதனையாக இருக்க வேண்டுமா என்பது எழுதுபவரை பொறுத்தது. அனால் உண்மையாக இருத்தல் வேண்டும். கொலையை தவிர மற்ற எல்லா பாவங்களையும் செய்துள்ளேன் என்றும் யாருக்காக அழுதான் படத்திற்கு பணம் கருப்பில் வாங்கி இருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளவும் ஒரு தைரியம் வேண்டும்.

Comments

Blog at WordPress.com.

Up ↑