To Yadhugiri

தன மகள் யதுகிரி திருமணமாகி கணவன் வீட்டிற்கு புறப்பட்டபோது பாரதியார் கூறிய புத்திமதி.

புக்கத்தில் தைரியமாக இரு. பயப்படாதே. ஒட்டுக் கேட்காதே. பிறர் கடிதங்களை உடைத்துப் பார்க்காதே. மனதில் உள்ளதை நேரில் சொல்லி விடு. மனதில் வைத்து உருகுவதை விட வாயினால் சொல்லிவிடுவது நல்லது.

உன்னால் முடிந்த அளவு அவர்கள் சொற்படி நட. உன்னால் முடியாவிட்டால் விஷயத்தை எடுத்துச் சொல்லிவிடு, மறைக்காதே! அதில் நன்மை உண்டு. உன்னை விலைக்கு கொடுத்து வாங்கவில்லை; அவர்கள் வீட்டை நன்றாக விளங்கவைத்து விருத்தி செய்யப் போகிறாய் அந்த வீட்டில் உனக்கு பூரண உரிமை உண்டு. அதற்காக பணம் காசு விஷயங்களில் தலையிடாதே. அதைப் பெரியவர்களுக்கு விட்டுவிடு.வேலை செய்யப் பின் பின்வாங்காதே ! அதற்காகச் சக்தி மீறிச் செய்யாதே ! செய்வதை உன் மனம் ஒப்பாச் செய்!

நன்றி: கல்கி 10-9-1972

அனைவருக்கும் உரிய எத்துணை அருமையான பொதுவான புத்திமதிகள்!

 

Comments

Create a free website or blog at WordPress.com.

Up ↑